நட்பு வலை

Friday, 5 April 2013

வடகறி

தேவையான பொருட்கள் : - கடலைப்பருப்பு -  200 கி வெங்காயம் - நான்கு தக்காளி - இரண்டு துருவிய தேங்காய் -  200 கி
பச்சைமிளகாய் - நான்குபூண்டு - ஒன்று பல் இஞ்சி - இரண்டு துண்டு மிளகாய்த்தூள் - சிறிதளவு
மஞ்சத்தூள் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
பட்டை - இரண்டு துண்டு ஏலக்காய் - நான்கு கிராம்பு - நான்கு பிரியாணி இலை - இரண்டு எண்ணெய் -  150 மி
உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை : - கடலைப்பருப்பை இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காய்யை மைய்ய அரைத்து பால் எடுத்து கொள்ளவும். 
வெங்காயம், தக்காளி பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும். இஞ்சியை தூளாக துருவிக் கொள்ளவும்.
ஊற வைத்த பருப்புடன் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், கொஞ்சம் உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் விழதாக அரைத்துக் கொள்ளவும். 
பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். 
பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள, வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
அதைத் தொடர்ந்து நறுக்கின தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். 
பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காய்ப் பால் மற்றும் சிறிது நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைகோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும். 
பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த சூட்டில் பத்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும். 
இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.

Tuesday, 30 August 2011

பூர்ண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் 
பச்சருசி மாவு :                      ஒரு கப்
பொட்டுக்கடலைமாவு :    அரை கப்
ஏலக்காய்                           :   5
துருவிய தேங்காய்        : அரை மூடி
சக்கரை :           இனிப்புக்கு தேவையான அளவு
 ஆயில் :           ஒரு ஸ்பூன் 

Monday, 15 August 2011

பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி

 
தேவையான பொருட்கள் 
ஆயில் :                             150 மில்லிகிராம்.
வெள்ளைப்பூண்டு :      100 கிராம் 
இஞ்சி :                               50  கிராம்
நெய் :                                  25  கிராம்
புதினா :                              சிறிதளவு 
பெரிய வெங்காயம்:     150  கிராம்
தக்காளி :                           6
எலுமிச்சம்பழம் :           2
மல்லி இலை :              சிறிதளவு     
மிளகாய்த்தூள் :           1 தேக்கரண்டி 
கோழிக்கறி :                   அரைக்கிலோ
பிரி.மசாலா :                 1 ஸ்பூன்
பிரி.அரிசி :                      அரைக்கிலோ

பட்டை, கிராம்பு,ஏலக்காய்: 10 

சுதந்திர நல்வாழ்த்துக்கள்

அன்பிக்கினிய வலையுல நெஞ்சங்களுக்கு , உங்கள் அன்பு சகோதரியின் சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள் 

Thursday, 11 August 2011

தெய்வ குளத்து காளியம்மன்

அன்பான வாசகர்களே நான் பொள்ளாச்சியை சார்ந்த ஒரு கிராமத்தில் உள்ள கோவிலைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன். பொள்ளாச்சியை அடுத்து 18 கி.மீ. தொலைவில் ஆனைமலை செல்லும் வழியில் சேத்துமடை என்ற ஒரு கிராமம் உள்ளது.

 ஆனைமலை செல்லும் அனைத்து பேருந்துகளும் செத்துமடைக்கு செல்லும். அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் தெய்வ குளத்து காளியம்மன் என்ற திருக்கோவில்