நட்பு வலை

Wednesday 27 July 2011

கத்திரிக்காய் வதக்கல்

தேவையான் பொருட்கள் 


நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் :  250  கிராம் 
ஆயில் : தேவையான அளவு 
கடுகு : ஒரு சிட்டிகை 
கருவேப்பிலை : 2 கொத்து 
மிளகாய் தூள் : 1 ஸ்பூன் 
மட்டன் மசாலா : 1 ஸ்பூன்
கரம் மசாலா : அரை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு



செய்முறை :
முதலில் வானலியில் ஆயில் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,சேர்த்து தாளிக்கவும் .பின் கத்தரிக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்பு உப்பு , ம.-மசாலா, கரம்மசாலா,மிளகாய் தூள், காரத்துக்கு ஏற்ப சேர்த்து எண்ணையிலேயே நன்கு வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பின்பு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் தண்ணீர் சுண்டிய உடன் இறக்கி பரிமாறலாம். தயிர் சாதம் மற்றும் அரிசிம்பருப்பு போன்றவற்றிற்கு நல்ல சைடிஷ் .


மறக்காம சுவையறிந்து கருத்து சொல்லுங்க ..............

17 comments:

  1. அருமையாக ருசிக்கும் போலிருக்கிறதே...கத்தரிக்காய் வதக்கலில் வெங்காயம் இருக்கிறதே....

    ReplyDelete
  2. அருமையாக ருசிக்கும்

    ReplyDelete
  3. இன்றே செய்து பார்த்துவிட வேண்டியதுதான் !

    ReplyDelete
  4. பதிவை படிக்கும் போதே பசிக்குது கூடவே ருசிக்குது,,,,,,,,,,,,

    ReplyDelete
  5. ஆகா பார்க்கும்போதே நா ஊறுதே...........
    நாளைக்கே ஒருகிலோ கத்தரிக்காய் வேண்டி
    வதக்கீடவேண்டியதுதான்.....நன்றி சகோதரி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. நல்ல டிஷ். ஆனா இதெல்லாம் தோட்டங்காட்டுல இருக்கிறவங்க, அப்பத்திக்கப்ப கத்தரிக்காயப் பொறிச்சுட்டு வந்து செஞ்சா சூப்பரா இருக்கும். எங்க அமிச்சி அந்தக்காலத்துல செஞ்சு போடுவாங்க. இப்ப நெனச்சாலும் இனிக்குது.அந்தக்காலம் இனி எங்க வரப்போகுது?????

    ReplyDelete
  7. பார்க்கும் போதே பசிக்குது....

    ReplyDelete
  8. இன்றே செய்து பார்த்துவிட வேண்டியதுதான்

    ReplyDelete
  9. பதிவை படிக்கும் போதே பசிக்குது கூடவே ருசிக்குத............

    ReplyDelete
  10. மதியம் சாப்பாட்டுக்கு இருக்க கூடாதாணு ஏங்க வைக்குது

    ReplyDelete
  11. தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  12. goma தங்கள் கருத்துக்கு நன்றி கோமா!!!!

    ReplyDelete
  13. அருமையான சமையல் குறிப்பு

    பகிர்வுக்கு நன்றி

    ஏன் அதன் பிறகு ஒன்றும் பதிவிடவில்லை

    ReplyDelete
  14. வெளிநாட்டில் வாழும் எங்களைப் போன்றாவர்களுக்கு இது சிறந்தபதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்
    அன்புடன்
    சக்தி

    ReplyDelete
  15. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !.....

    ReplyDelete
  16. சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

எனது வலை பூவிற்கு வந்து என் எண்ணங்களை படித்து கருத்தளிக்க வந்துள்ள சகோதர! சகோதரிகளே!! தங்கள் ஆதரவை என்றும் எனக்களிக்க வேண்டுகிறேன், தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வாரி வழங்குங்கள்!