நட்பு வலை

Friday 5 April 2013

வடகறி

தேவையான பொருட்கள் : - கடலைப்பருப்பு -  200 கி வெங்காயம் - நான்கு தக்காளி - இரண்டு துருவிய தேங்காய் -  200 கி
பச்சைமிளகாய் - நான்குபூண்டு - ஒன்று பல் இஞ்சி - இரண்டு துண்டு மிளகாய்த்தூள் - சிறிதளவு
மஞ்சத்தூள் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
பட்டை - இரண்டு துண்டு ஏலக்காய் - நான்கு கிராம்பு - நான்கு பிரியாணி இலை - இரண்டு எண்ணெய் -  150 மி
உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை : - கடலைப்பருப்பை இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காய்யை மைய்ய அரைத்து பால் எடுத்து கொள்ளவும். 
வெங்காயம், தக்காளி பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும். இஞ்சியை தூளாக துருவிக் கொள்ளவும்.
ஊற வைத்த பருப்புடன் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், கொஞ்சம் உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் விழதாக அரைத்துக் கொள்ளவும். 
பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். 
பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள, வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
அதைத் தொடர்ந்து நறுக்கின தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். 
பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்த்தூள், மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காய்ப் பால் மற்றும் சிறிது நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைகோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும். 
பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த சூட்டில் பத்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும். 
இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.

No comments:

Post a Comment

எனது வலை பூவிற்கு வந்து என் எண்ணங்களை படித்து கருத்தளிக்க வந்துள்ள சகோதர! சகோதரிகளே!! தங்கள் ஆதரவை என்றும் எனக்களிக்க வேண்டுகிறேன், தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வாரி வழங்குங்கள்!