நட்பு வலை

Monday, 15 August 2011

பொள்ளாச்சி சிக்கன் பிரியாணி

 
தேவையான பொருட்கள் 
ஆயில் :                             150 மில்லிகிராம்.
வெள்ளைப்பூண்டு :      100 கிராம் 
இஞ்சி :                               50  கிராம்
நெய் :                                  25  கிராம்
புதினா :                              சிறிதளவு 
பெரிய வெங்காயம்:     150  கிராம்
தக்காளி :                           6
எலுமிச்சம்பழம் :           2
மல்லி இலை :              சிறிதளவு     
மிளகாய்த்தூள் :           1 தேக்கரண்டி 
கோழிக்கறி :                   அரைக்கிலோ
பிரி.மசாலா :                 1 ஸ்பூன்
பிரி.அரிசி :                      அரைக்கிலோ

பட்டை, கிராம்பு,ஏலக்காய்: 10 

செய்முறை :

இஞ்சி,பூண்டு,பட்டை,கிராம்பு,ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெடிக்க விடவும். வெங்காயம்,தக்காளி,புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும், பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், பிரி.மசாலா, ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின் நங்கி கழுவிய கோழிக்கறியையும் சேர்த்து நன்கு வதக்கி பின் உப்பு சேர்த்து வதக்கவும், ஒரு டம்ளர் அரிசிக்கு ரெண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி உப்பு சரி பார்த்துக்கொள்ளவும், குக்கரில் 3  விசில் வரை வேக விடவும், விசில் அடங்கியபின் 2 எலுமிச்சம் பழத்தை பிழிந்து, நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும், தயிர் பச்சடி சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்,

சாப்பிட்டு பார்த்து கருத்து சொல்லனுமுங்க.............

13 comments:

 1. அருமை அருமை அருமை

  செய்முறை விளக்கம்

  சாப்பாட்டின் ருசி

  பதிவின் படங்கள்

  ReplyDelete
 2. அதென்ன பொள்ளாச்சி பிரியாணி,
  எப்படியோ நல்ல இருந்துச்சு, ஆனா காரம் தான் கொஞ்சம் ஓவர்,
  அடுத்த ரெசிப்பி என்ன சொல்லுங்க, கொஞ்சம் இனிப்பா இருந்தா பரவா இல்லை

  ReplyDelete
 3. கருத்திட்ட இருவருக்கும் நன்றி!!!!!! அடுத்த ரெசிப்பி இனிப்பாவே போட்ரலாம்

  ReplyDelete
 4. படிக்கவே ருசியா இருக்குங்க.. செய்து பாத்துருவோம்.

  ReplyDelete
 5. ஐய்யம்மாள், உங்கபக்கம் முதல் முறையா வரேன்.
  நான் ப்யூர் வெஜ். அதனால இந்தபதிவுக்கு கருத்து சொல்ல முடியல்லேம்மா.

  ReplyDelete
 6. Lakshmi said...
  ஐய்யம்மாள், உங்கபக்கம் முதல் முறையா வரேன்.
  நான் ப்யூர் வெஜ். அதனால இந்தபதிவுக்கு கருத்து சொல்ல முடியல்லேம்மா.

  நன்றி , தங்கள் கருத்துக்கு தொடர்ந்து வாருங்கள்..

  ReplyDelete
 7. கோயமுத்தூர்ல செஞ்சா அதுக்கு "கோயமுத்தூர் சிக்கன் பிரியாணி" அப்படீன்னு பேர் வச்சுக்கலாமுங்களா? எதாச்சும் வம்பு வழக்கு வராதுங்களே?

  ReplyDelete
 8. மன்னிக்கணும் சகோதரி உங்கவீட்டு உப்ப சுவச்சவுடனும்தான் இந்த அம்பாளுக்கு ஒன்னு ஞாபகம் வந்திச்சு அட இம்புட்டு நாளும் உங்கள பின்தொடர இல்லையாக்கும் .இப்ப அந்தக் குற சரியாப் போச்சு .நன்றி சகோ அருமையான தகவலுக்கு ....

  ReplyDelete
 9. வாய்க்கு ருசியா சமச்சுப் போடுற உங்கள நான் இன்று வாய்விட்டு சிரிக்கவைக்கப் போகின்றேன் வாருங்கள் சிரிப்போம் .....

  ReplyDelete
 10. பொள்ளாச்சி பிரியாணி நாக்கு சப்பு கொட்ட வைக்குதுங்கோவ்

  ReplyDelete
 11. பொள்ளாச்சி பிரியாணி செய்ய அசத்தலான டிப்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

  ReplyDelete
 13. ரொம்ப நல்ல இருக்கு , போட்டோக்களுக்கு பெயரை போடுங்க் இல்லன்னா கொஞ்சம் நாள் ள ஆட்டய போட்டுவாஙக்

  ReplyDelete

எனது வலை பூவிற்கு வந்து என் எண்ணங்களை படித்து கருத்தளிக்க வந்துள்ள சகோதர! சகோதரிகளே!! தங்கள் ஆதரவை என்றும் எனக்களிக்க வேண்டுகிறேன், தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வாரி வழங்குங்கள்!