நட்பு வலை

Thursday 11 August 2011

தெய்வ குளத்து காளியம்மன்

அன்பான வாசகர்களே நான் பொள்ளாச்சியை சார்ந்த ஒரு கிராமத்தில் உள்ள கோவிலைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன். பொள்ளாச்சியை அடுத்து 18 கி.மீ. தொலைவில் ஆனைமலை செல்லும் வழியில் சேத்துமடை என்ற ஒரு கிராமம் உள்ளது.

 ஆனைமலை செல்லும் அனைத்து பேருந்துகளும் செத்துமடைக்கு செல்லும். அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் தெய்வ குளத்து காளியம்மன் என்ற திருக்கோவில்
அமைந்துள்ளது. அந்த கோவில் மிக பிரம்மாண்டமாக கட்டப்படவில்லை ஆனால் பழங்கால முறைப்படி சாதாரண சிலைகளும், கர்த்தூன்களும் ஒரு கோபுரமும், வரலாற்றை எடுத்து சொல்லும் கிணறும் உள்ளது. இந்த கோவில் அறுபது வருடங்களுக்கு முன்பு சாமிக்கண்ணு கவுண்டர் என்பவரால் கட்டப்பட்டது. பழங்கால சிற்ப்பங்களும், கர்த்தூன்களும் இன்னமும்  அப்படியே பொலிவு குன்றாமல் உள்ளது. அந்த கோவிலில் உள்ள கிணறும் கோவில் கட்டிய போதுதான் தோண்டப்பட்டது,
கோடை காலத்திலும் தண்ணீர் இல்லாமல் ஆறு குளங்கள் வற்றிய போதிலும், இந்த கிணற்றில் மட்டும் நீர் வற்றியதே இல்லையாம். இந்த கிணற்றில் தான் அம்மன் குடி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது, அந்த வார்த்தைகளுக்கேற்ப கிணற்றின் நடுப்பகுதியில் நீர் குமிழிகள் வெளிப்படும். பாத யாத்திரையாக நடந்து வந்து அந்த கிணற்றில் வெற்றிலையின் மீது கற்பூரம் கொளுத்தி வழிபாடு நடத்தினால் கண்டிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்க்கு அந்த பேறு வந்தடையும் என்பது நம்பிக்கை.

 தினமும் அம்மனை குளிப்பாட்டவும், பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் மட்டுமே, அந்த கிணற்றின் நீர் உபயோகப்படுத்தப்படும்.அம்மனுக்கு பூஜை செய்த மஞ்சளும் குங்குமமும் மட்டுமே அந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பொள்ளாச்சியை சுற்றியுள்ள எந்த கோவிலில் திருவிழா ஆரம்பித்தாலும் முதல் தீர்த்தம் தெய்வ குளத்து காளியம்மன் தீர்த்தமாகத்தான் இருக்கும்,தற்ச்சமயம் அந்த கிணற்றை சுற்றி வேலி அமைத்துள்ளனர், கோவிலுக்கு சொந்தமாக 60 ஏக்கர் நிலம் உள்ளது, அதை குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் தான் கோவில் திருப்பணியும். திருவிழா செலவுகளும் செய்யப்படுகிறது,

 சித்திரையில் நோம்பி சாட்டப்பட்டு, அம்மனை 48 நாட்கள் கொழுவில் வைத்து, கொடிமரத்தில் 48 நாட்களும் தீபம் ஏற்றிவைத்து வழிபடபடுகிறது, 49 வது நாள் பூச்சாட்டு, 50 வது நாள் தீர்த்த குடம், மாவிளக்கு, 51 வது நாள் மஞ்சள் நீராட்டு என வெகு சிறப்பாக திரு விழ நடக்கும்.

 நா சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்புச்சி மாட்டு வண்டில ஜலத்தூரிளிருந்து குறுக்கு வழியா ஜமீன் ஊத்துக்குளி வழியாக கூட்டீட்டு போவாங்க, அது எனக்கு ரொம்ப பிடிக்கும், 

நீங்களும் பொள்ளாச்சி சுற்றுலா வந்தா மறக்காம இந்த கோயிலுக்கு வந்து பாக்கோனுமுங்க...ன்னு கேட்டுக்கிறேனுங்க........


மறக்காம 
 உங்க என்னத்த சொல்லுங்க.........

15 comments:

  1. தெய்வ குளத்து காளியம்மன் அருள் தரிசனம் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தெய்வ குளத்து காளியம்மன் திருக்கோவிலைப்பற்றி நல்ல நடையில் பதிவில் பகிர்ந்துள்ளீர்கள்... காளியம்மன் அனுகிரஹம் கிடைத்தால் கண்டிப்பாக அம்மனின் தரிசனம் காணக்கிடைக்கும்... ஆன்மீக பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. என் கல்லூரி நாட்களில் இந்த இடத்துக்கு வந்து இருக்கின்றேன்(குரங்கணி பால்ஸ்.ஆணை மலை, வால்பாறை)ஆனால் இந்த கோவிலுக்கு சென்றதாக ஞாபகம் இல்லை மறு முறை வாய்பு இருந்தால் என் குடும்பத்தோடு வருகின்றேன்
    பகிருவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தெய்வ குளத்து காளியம்மன் பற்றி தெளிவாக விளக்கி உள்ளீர்கள் சகோ..

    கண்டிப்பாக பொள்ளாச்சி வந்தா அந்த கோவிலை சென்று தரிசிக்கிறேன் சகோ ..

    நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  5. நீங்களும் பொள்ளாச்சி சுற்றுலா வந்தா மறக்காம இந்த கோயிலுக்கு வந்து பாக்கோனுமுங்க...ன்னு கேட்டுக்கிறேனுங்க........//nandri

    ReplyDelete
  6. கண்டிப்பா வர்ரோமுங்க.

    ReplyDelete
  7. அன்பு சகோதரி அய்யம்மாள் அவர்களுக்கு
    நானும் அந்த கோவிலுக்கு சென்றுள்ளேன், மிக அருமையாக இருக்குமே, பகிர்வுக்கு நன்றி!!!!!!!!

    தொடர்ந்து போஸ்ட் போடவும், கால தாமதம் பதிவுலகில் தங்களின் வாசகர்களை இழக்கக்கூடும்.

    ReplyDelete
  8. நண்பர்களே எனது பதிவுக்கு வந்து கருத்தளித்தமைக்கு நன்றி! தங்கள் ஆதரவு என்றும் தொடரனும் என்பது எனது அவா

    ReplyDelete
  9. நாங்களும் மாட்டுவண்டில போகணும் நு ஆசைகாமிச்சிட்டீங்க அக்கா..! சரி அட்லீஸ்ட் பஸ்லயாவது போய் பாக்கறேங்கா... நன்றி

    ReplyDelete
  10. சித்ரவேல் - சித்திரன் said...
    நாங்களும் மாட்டுவண்டில போகணும் நு ஆசைகாமிச்சிட்டீங்க அக்கா..! சரி அட்லீஸ்ட் பஸ்லயாவது போய் பாக்கறேங்கா... நன்றி

    ////அம்மன் அருளால் உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்,,//////

    ReplyDelete
  11. நல்ல தகவல் வாழ்த்துக்கள் சகோதரி....

    காட்டான் குழ போட்டான்

    ReplyDelete
  12. பதிவில் நமது கொங்கு மண்ணின் மணம் கமழுகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. தங்கள் கருத்துகளுக்கு நன்றி .சுதந்திரதின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. மிக்க நன்றி சகோ அருமையா தகவல் அம்பாளின்
    அருள் முகத்தைக் காணக் கண்கோடி வேண்டும் .
    அருமையான இத்தகவலைத்தந்த தங்களுக்கு நன்றி
    எனது தளத்திற்கு முடிந்தால் வாருங்கள் .இரண்டு
    கவிதை உள்ளது .உங்கள் கருத்துக்களையும்
    ஓட்டுக்களையும் தந்து இக் கவிதைகளை அனைவரும்
    வாசிக்க உதவுங்கள் .நன்றி .

    ReplyDelete

எனது வலை பூவிற்கு வந்து என் எண்ணங்களை படித்து கருத்தளிக்க வந்துள்ள சகோதர! சகோதரிகளே!! தங்கள் ஆதரவை என்றும் எனக்களிக்க வேண்டுகிறேன், தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வாரி வழங்குங்கள்!